29. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

அமைவிடம் :temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 29
இறைவன்: வன்றொண்டீஸ்வரர்
இறைவி : அபிராமியம்மை
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருப்பெருமங்கலம்
முக்தி தலம் : திருப்பெருமங்கலம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆனி - ரேவதி
வரலாறு : சோழ நாட்டில் பெருமங்கலம் என்னும் தலத்தில் அவதாரம் செய்தார். ஒரு சமயம் சுந்தரர் தம் மனைவியிடம் இறைவனையே தூது அனுப்பினார். அந்த செய்தி கேட்டு அவர் மீது கலிக்காமர் வெறுப்பும் ஆத்திரமும் அடைந்தார். அதனைத் தீர்த்து வைக்குமாறு சுந்தரர் இறைவனிடம் வேண்ட இறைவரும் கலிக்காமருக்கு சூலை நோய் கொடுத்து சுந்தரர் வந்து இதனைத் தீர்ப்பார் என்று அவர் கனவில் தோன்றிக் கூறினார். சுந்தரரால் நோய் தீர்க்கப்படக்கூடாது எனக்கருதிய கலிக்காமர் அவர் வருமுன்பே தன் வயிற்றைக் கத்தியால் அறுத்துக்கொண்டு உயிர் துறந்தார். இதனைக் கண்ட சுந்தரரும் அக்கத்தியால் தம்மை மாய்த்துக்கொள்ள முற்பட்டபோது இறைவன் தடுத்தாட்கொண்டு கலிக்காமரை உயிர்ப்பித்தார்.
முகவரி : அருள்மிகு. வன்றொண்டீஸ்வரர் திருக்கோயில், திருப்பெருமங்கலம்– 609112 சீர்காழி வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : திரு. கலியபெருமாள்
திருப்பெருமங்கலம் (திருப்புன்கூர் வழி)
தொலைபேசி : 04364-279028

இருப்பிட வரைபடம்


ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல்செய் வேல் குடைவது என்ன
வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து
பூத நாயகர்தம் பொற்றாள் பற்றியே போற்றுகின்றார் -390

- பெ.பு. 356
பாடல் கேளுங்கள்
 ஏதமில்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க